Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய தேசியக் கட்சியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் கலைத்துவிட்டு ஸ்ரீலங்கா ஐக்கிய தேசிய சுதந்திரக் கட்சி என்கிற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளிலிருந்து முரண்பட்ட நிலையிலேயே முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார். ஆனால், இன்றைக்கு சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாடுகளில் கலந்து கொள்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் சுதந்திரக் கட்சியின் மாநாடுகளில் கலந்து கொள்கின்றார்கள். இப்படியான நிலையில், புதிய கட்சியை அமைத்து செயற்படலாம்” என்றும் முன்னாள் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்தோடு, தற்போதைய அரசாங்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகத் தெரிவித்துக் கொண்டு நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்க இடமளிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

0 Responses to ஸ்ரீலங்கா ஐக்கிய தேசிய சுதந்திரக் கட்சியை ஆரம்பிக்கலாம்; மஹிந்த யோசனை!

Post a Comment

Followers