Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் பயணத்துக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஜோன் கெரிக்கும் இடையில் நேற்று புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, ஜோன் கெரி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, பொருளாதார முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துவரும் வழிமுறைகளை தொடர்ந்தும் கடைப்பிடிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கை அரசாங்கமானது, வடக்கு மற்றும் தெற்கில் ஸ்திரத்தன்மையற்று செயற்படும் சில நல்லிணக்கத்திற்கு எதிரானவர்களிடமிருந்து பல சவால்களை எதிர்கொண்டுவருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உதாரணமாக வடக்கில், சிறியளவிலான மக்கள் குழுவினர், சில தீவிரவாதக் குழுக்களின் அழுத்தங்கள் காரணமாக அவர்களுடைய சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்பிச் செல்வதற்கு மறுத்துவருவதாகவும், அதேபோல் தெற்கிலுள்ள சில தீவிரவாதக் குழுக்கள் நல்லிணக்க முயற்சிகளை குழப்புவதில் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், தேசிய அரசாங்கமானது அவ்வாறான எதிர்ப்புக்களை கவனத்தில் கொள்ளாது தேவையான திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும், தேசிய அரசாங்கத்தில் வேறுபட்ட கொள்கைகள் காணப்பட்டாலும், நல்லிணக்க செயற்பாட்டினை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் பரந்துபட்ட ரீதியிலான கொள்கையின் அடிப்படையில் பணிபுரிவதற்கு இணங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன் காரணாமாக அரசாங்கத்தினை மேலும் பலப்படுத்திக்கொண்டு, 2015 ஜனவரி 08இல் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்ய மக்களினுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 மாதங்களில் இலங்கை அரசாங்கம் அடைந்துகொண்ட சாதனைகளுக்காக ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜோன் கெரி, அமெரிக்காவின் உதவிகள் தொடர்ந்தும் இலங்கை அரசுக்கு கிடைக்குமென்றும் உறுதியளித்துள்ளார்.

0 Responses to இலங்கையின் புதிய பயணத்துக்கு அமெரிக்கா ஆதரவு; மைத்திரியிடம் ஜோன் கெரி தெரிவிப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.