Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தூண்டும் மத்திய அமைச்சரை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், காவிரி சிக்கலை மையமாக வைத்து கன்னட வெறியர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கலவரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும்நிலையில், தமிழர்கள் மீது அவதூறு பரப்பி மீண்டும் கலவரத்தை தூண்ட மத்திய அமைச்சர் சதானந்த கவுடா முயற்சி செய்கிறார்.

அமைதிக்கு எதிரான அவரது நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை என்று கூறியுள்ளார்.  மேலும், பெங்களூருவில் திங்கட்கிழமை காலை முதல் கன்னட வெறியர்கள் அரங்கேற்றிய வன்முறை மாலையில் உச்சக்கட்டத்தை அடைந்தது. தமிழர்களுக்கு சொந்தமான 50 க்கும் மேற்பட்ட பேருந்துகளும், நூற்றுக்கும் மேற்பட்ட சரக்குந்துகளும் தீயிட்டு எரிக்கப்பட்டன. மேலும் பல நிறுவனங்களும் சூறையாடப்பட்டன. இந்த வன்முறை மற்றும் கலவரத்தை ஒட்டுமொத்த உலகமும் கண்டித்துள்ள நிலையில், கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் சதானந்த கவுடா மட்டும் இவற்றை நியாயப்படுத்தியிருக்கிறார்.

பெங்களூருவில் ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்த அவர், ‘‘கர்நாடகத்தைச் சேர்ந்த எவரும் வன்முறையில் ஈடுபடவில்லை. மாறாக தமிழ்நாட்டில் தான் கன்னடர் மீது திட்டமிட்டு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த கன்னடர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்’’என கூறியுள்ளார்.  முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஒட்டுமொத்த இமயமலையையே சோற்றில் மறைப்பதற்கு சதானந்த கவுடா முயன்றிருக்கிறார்.என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அதோடு,காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திலிருந்து எந்த ஒரு சூழலிலும் ஆத்திரமூட்டும் செயல்கள் கட்டவிழ்த்து விடப்படவில்லை. மாறாக கர்நாடகத்தில்தான் பெயர் தெரியாத அமைப்புகளின் நிர்வாகிகள் தொடங்கி, அமைச்சர்கள் வரை ஆத்திரமூட்டும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசி வந்தனர்.  தமிழகத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கடந்த 5&ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்டதுமே தமிழருக்கு எதிரான வன்முறைகளை கன்னட வெறியர்கள் கட்டவிழ்த்து விட்டனர்.

9-ஆம் தேதி நடைபெற்ற முழு அடைப்பின் போது தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனாலும், தமிழகத்தில் தமிழர்கள் அமைதி காத்தனர். கன்னடர் நடத்தும் வணிக நிறுவனங்களுக்கும், அவர்கள் வாழும் பகுதிகளுக்கும் தமிழக காவல்துறை பாதுகாப்பு அளித்தது.  காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற தீர்ப்பை மாற்றக் கோரி  கர்நாடகம் தாக்கல் செய்த மனுவை 12-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக அரசைக் கண்டித்ததுடன், தமிழகத்திற்கு கூடுதல் நீரை திறந்து விட ஆணையிட்டது. அதற்கு அடுத்த நிமிடமே கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் காட்டுத் தீ போல பரவின.

இதற்கு தமிழர்களின்  ஆத்திரமூட்டல் காரணமல்ல. மாறாக, தமிழர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட வேண்டும்; அதன்மூலம் அரசியல் லாபம் தேட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த கன்னட அமைப்புகள் உச்சநீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்திக் கொண்டன. இதற்கு ஆயிரக்கணக்கான ஆதாரங்களை என்னால் காட்ட முடியும்.என்று கூறியுள்ளார்.

பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பேருந்துகளை எரிக்க வன்முறையாளர்கள் கும்பலாக சென்றதை காவலர்கள் தடுக்காதது ஏன்? பேருந்துகள் தீயிட்டு எரிக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே தீயணைப்பு  நிலையம் இருக்கும் போதிலும், தீயை அணைக்க  தீயணைப்பு   வாகனங்கள் அனுப்பப்படாதது ஏன்? நெடுஞ்சாலைகளில் தமிழக வாகனங்களின் ஓட்டுனர்களை சிலர் ஆடைகளை கவிழ்ந்து அவமானப்படுத்திய போது அதை காவல்துறை தடுக்காதது ஏன்? காவிரி சிக்கல் தீவிரமடையும்நேரத்தில் 600 போக்கிரிகளை விடுதலை செய்தது ஏன்? என கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

மொத்தத்தில் கர்நாடகத்தில் நடைபெற்ற வன்முறைகள் அனைத்தும் அரசியல் லாபம் தேடுவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டவைதான். உண்மை அவ்வாறு இருக்கும் போது தமிழர்கள்தான் வன்முறைக்கு காரணம் என்று மத்திய அமைச்சர் கூறுவது கன்னடர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி மீண்டும் வன்முறை வெறியாட்டத்தை நடத்துவதற்காக மேற்கொள்ளப்படும்  முயற்சியே ஆகும்.

சதானந்த கவுடா மத்திய சட்ட அமைச்சராக இருந்தவர்; அதற்கு முன் கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்தவர். அப்படிப்பட்டவருக்கு எந்த ஒரு பிரச்சினையையும் பொறுப்புடன் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அதைவிடுத்து வாட்டாள் நாகராஜின் மறு உருவம் போல பேசுவது பேரதிர்ச்சி அளிக்கிறது. அதிலும், கர்நாடகத்தில் பதற்றத்தை தணிக்கும் நோக்குடன் அங்குள்ள மக்கள் அமைதி காக்க வேண்டும்  பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், முதலமைச்சர் சித்தராமய்யா உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் சதானந்த கவுடா இப்படி பேசியிருப்பதை  மன்னிக்க முடியாது.

இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்து தெரிவித்த சதானந்த கவுடாவை  பிரதமர் மோடி கண்டிப்பதுடன்  அமைச்சரவையிலிருந்தும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்..

0 Responses to தமிழர் மீது பழி சுமத்தி மீண்டும் கலவரத்தை தூண்டும் மத்திய அமைச்சரை நீக்க வேண்டும்:ராமதாஸ்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.