Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பதுக் குறித்து ஆலோசிக்க இன்று காலை ஸ்டாலினை சந்தித்தார் ஜி.கே.வாசன்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில், தமாக தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பின் போது பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், மரியாதை நிமித்தம் ஸ்டாலினை சந்தித்தேன் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பதுக் குறித்த முதற்கட்ட ஆலோசனையும் நடைபெற்றது என்றும் கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பிறகு, கூட்டணி அமைப்பதுக் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அவர் மேலும் கூறினார்.

0 Responses to உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்க ஸ்டாலினை சந்தித்தார் ஜி.கே.வாசன்!

Post a Comment

Followers