Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடான வாகன கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உதவி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜனாதிபதி செயலகத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடான வாகன கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுப் புதன்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த விமல் வீரவங்ச, விசாரணைக்குச் செல்ல முன்னர் ரணில் விக்ரமசிங்கவை, கொழும்பில் உள்ள அவரது வாசஸ்தலத்தில், நேற்றுக் காலை 08.00 மணிக்குச் சந்தித்துள்ள கூறப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க, செவ்வாய்க்கிழமை இரவு முதல் கடும் முயற்சிகளை மேற்கொண்ட விமல் வீரவங்ச, நேற்றுக் காலையே, பிரதமரைச் சந்தித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பொலிஸ் நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு நேற்றுப் புதன்கிழமை சென்றிருந்த அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிக்கச் செல்வதென்பது, திரும்பி வரமுடியாத இடத்துக்குச் செல்வது போன்றதென, செவ்வாயன்று மஹாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்றபோது, விமல் வீரவங்ச குறிப்பிட்டிருந்தார்.

அரச வாகனத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், விமல் வீரவங்சவின் சகோதரர் சரத் வீரவன்ச, தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். எனினும், விமல் வீரவங்ச கைது செய்யப்படுவதைத் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலையிட்டுத் தடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

வீடமைப்பு மற்றும் கட்டட நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், பொறியியல் திணைக்களத்தின் வாகனங்களை, முறையற்ற விதத்தில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே, விமல் வீரவங்சவிடம், நேற்று வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஊழல் குற்றச்சாட்டுக்கள்; ரணிலிடம் உதவி கோரினாரா விமல் வீரவங்ச?

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.