Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று முன்னாள் புனர்வாழ்வு ஆணையாளரும், மேற்கு பிராந்திய பாதுகாப்பு படைகளின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காக இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக கூறிய அவர், புனர்வாழ்வுக்கு பொறுப்பாக செயற்பட்டவன் என்ற வகையில் இது போன்ற குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை உட்பட ஒன்பது நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்பு கிழக்கு மாகாணத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முப்படைகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்று வந்த ‘நீர்க்காகம்’ கூட்டுப் பயிற்சி நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

அது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு திருகோணமலையில் நடைபெற்றது. அங்கு விச ஊசி விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுதந்த ரணசிங்க மேற்கண்ட விடயங்களையும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “எழுப்பப்பட்ட கேள்விக்கு உண்மையில் நான் பொறுப்புடன் பதிலளிக்கின்றேன். ஏனெனில் சுமார் ஒருவருடமும் பத்து மாதமும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக நான் செயற்பட்டுள்ளேன். இந்தக் கால பகுதிக்குள் 11ஆயிரத்து 600 பேருக்கு புனர்வாழ்வு வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டனர்.

அரசாங்கம், பாதுகாப்பு படையினர் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்தே இந்த பணிகளை செய்துள்ளோம். இவர்களுக்கு வேண்டிய பரிசோதனை நடத்தி பார்க்கலாம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் உள்ளது. இவ்வாறான நிலையிலேயே தனிப்பட்ட தேவைகளுக்காக இது போன்ற விச ஊசி கருத்துக்களை சிலர் தெரிவிக்கின்றனர்.” என்றுள்ளார்.

0 Responses to முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை: சுதந்த ரணசிங்க

Post a Comment

Followers