Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் பிரார்த்தனை கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலியாகினர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாரணாசியில் பாபா ஜெய் குருதேவின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர். ராஜ்காட் பாலத்தின் வழியாக அவர்கள் சென்றபோது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நடந்து சென்றவர்களுடன் வாகனங்களும் ஒருசேர சென்றதால் முன்னும்பின்னும் நகர முடியாத நிலை ஏற்பட்டது. 

இதனால், ஒருவரையொருவர் நெட்டித்தள்ளியபடி முன்னேற முயன்றனர். அப்போது ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயம் அடைந்தனர். நேரம் செல்லச்செல்ல கூட்டமும் அதிகரித்ததால் நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதில், பலர் கூட்டத்திற்குள் சிக்கி உயிரிழந்தனர்.

0 Responses to உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் பிரார்த்தனை கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி!

Post a Comment

Followers