Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய கல்வி மட்டத்தை  அடைவதற்கு தெற்கு ஆசியாவுக்கு 15 மில்லியன் புதிய ஆசிரியர்கள் தேவைப் படுவர் என புதிதாக வெளியிடப் பட்ட ஓர் அறிக்கையில் ஐ.நா இன் யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. ஆக்டோபர் 5 ஆம் திகதி உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த அறிக்கையில் உலகளாவிய ரீதியில் 69 மில்லியன் புதிய ஆசிரியர்கள் இன்னும் 14 வருடங்களுக்குள் தேவைப் படுவர் என்றும் கணிப்பு கூறப்பட்டுள்ளது.

இன்றைய உலகில் உலகம் முழுதும் பள்ளிக்குச் செல்லாது இருக்கும்  சுமார் 263 மில்லியன் மாணவர்களுக்குக் கல்வியைப் புகட்டவும், ஏற்கனவே கல்வி கற்று வருபவர்களின் கல்வித் தராததரத்தை உயர்த்தவும், அதிகளவு மாணவர் தொகையைப் பிரித்து அளித்து சமநிலையைப் பேணவும் என்றே இந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை  தேவைப் படுகின்றது என்று கூறப்பட்டுள்ளது.

ஐ.நா இன் இந்த புதிய ஆசிரியர்களின் அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு 2015 ஆம் ஆண்டு அதன் உறுப்பு நாடுகள் சம்மதம் தெரிவித்து இருந்தன. இந்நிலையில் குறித்த அறிக்கையில் தெற்கு ஆசியாவைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளே 2 ஆவது அதிகபட்ச ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் நாடுகளாகத் திகழ்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to 2030 ஆம் ஆண்டளவில் தெற்கு ஆசியாவுக்கு 15 மில்லியன் புதிய ஆசிரியர்கள் தேவைப் படும்!: ஐ.நா

Post a Comment

Followers