Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

28 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

காவிரி பிரச்சனையால் கடந்த ஒரு மாதமாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கர்நாடகத்துக்கும், கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கும் என்று சரக்கு லாரிகள் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிக் கிடந்தன.இதனால், அத்தியாவசிய பொருட்களுக்கு இரு மாநில மக்களுக்கும் கஷ்டம் நீடித்து வந்த நிலையில், லாரிகள் உரிமையாளர்கள் சரக்கு லாரிகளை இயக்க முன்வந்தனர்.  

எனவே இரு மாநில காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்புடன் கர்நாடகாவிற்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஓசூர் எல்லையில் 28 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட தமிழக லாரிகள் இன்று பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. இதே போன்று கர்நாடகாவில் இருந்து சரக்கு லாரிகள் தமிழகத்துக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

0 Responses to 28 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு சரக்கு வாகனங்கள்!

Post a Comment

Followers