Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முற்கூட்டிய ஒதுக்கீடு தொடர்பான சட்டமூலம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த வகையில், எதிர்வரும் ஆண்டிற்கான அரசாங்கத்தின் செலவீனம் சுமார் ரூபா 182,400 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஒதுக்கீட்டில் பாதுகாப்பிற்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, அது ரூபா 28,344 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

விபரம்:

பாதுகாப்பு அமைச்சு - ரூபா 28,344 கோடி

உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு - ரூபா 16,340

சுகாதார அமைச்சு - ரூபா 16,094 கோடி

கல்வி - ரூபா 7,694 கோடி

இதேவேளை, எதிர்வரும் வருடத்திற்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பர் 10ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு, வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தினமாக டிசம்பர் 10ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்தே குறித்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு, திருத்தப்பட்ட பெறுமதி சேர் (VAT) வரி தொடர்பான சட்டமூலம் இம்மாதம் 26ஆம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

0 Responses to வரவு- செலவுத் திட்ட முற்கூட்டிய ஒதுக்கீடு: பாதுகாப்புக்கு 28,000 கோடி, கல்விக்கு 7500 கோடி!

Post a Comment

Followers