Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முதல்வரின் உடல் நிலை குறித்த அறிக்கை வெளியிடக் கோரிய டிராபிக் ராமசாமி வழக்கு விசாரணை 4 நிமிடங்களில் முடிந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்  டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்ததில் பப்ளிசிட்டி தேடும் வேலையை செய்ய வேண்டாம் என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முதல்வர் உடல்நிலை குறித்த பல்வேறு முரண்பட்ட தகவல் வருவதால் முதல்வர் உடல்நிலை குறித்து அறிவிக்க வேண்டும் என்று  டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். முதல்வர் உடல் நிலை காரணமாக அரசு நிர்வாகம் முடங்கி போயுள்ளது என்று தெரிவித்து உடல்நிலை பற்றி அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். 

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் முதல்வரின்  உடல்நிலை பற்றி அறிவிப்பது அவரின் தனி நபர் உரிமை. அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே அவரது கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

அப்போது தனிநபர் சுதந்திரம் இருக்கிறது. இருந்தாலும் அரசின் நிர்வாகத்தை கவனித்து வரும் முதல்வரின் உடல்நிலை குறித்து மக்கள் அறிந்து கொள்ள உரிமை உள்ளது என நீதிபதிகள் நீதிபதிகள் சுந்தரேஷ்,மகாதேவன் கருத்து தெரிவித்தனர்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் முதல்வர் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தார். ஆனால்  நீதிபதிகள் மருத்துவமனை நிர்வாகம் உடல்நிலை பற்றி அறிக்கை வெளியிட்டாலும், அதை ஏற்றுகொள்ள முடியாது அரசு நிர்வாகம் முதல்வரின் உடல் நிலைபற்றி தெரிவிக்க வேண்டும். அது தான் நம்பக தன்மையாக இருக்கும் என்றனர்.

ஆகவே அரசு இது பற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றனர். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் இன்று வெளியிடுவதாக அவகாசம் கோரியிருந்தார். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, ஆனால் வழக்கமாக தனது வழக்குக்காக தானே வாதாடும் டிராபிக் ராமசாமி இன்று நீதிமன்றம் வரவில்லை. அவருக்காக வழக்கறிஞர் வாதாடினார். 

அவர் வாதத்தின்  இடையே தலையிட்ட  தலைமை நீதிபதி முதல்வர் உடல்நிலை பற்றிய அறிக்கைகள் அவ்வப்போது வெளிவருகிறதே நீங்கள் கவனிக்கவில்லையா என்று கேட்டார். அதற்கு தனது வாதத்தில் பேசிய வழக்கறிஞர் முதல்வரின் உடல் நலபாதிப்பால் அரசு நிர்வாகம் முடங்கி போயுள்ளது என்று கூறினார். 

அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி அப்படியெல்லாம் முடங்கியதாக தெரியவில்லை வழக்கமான பணிகள் நடந்துகொண்டுத்தான் இருக்கிறது. முதல்வர் உடல்நிலை விஷயத்தில் விளம்பரம் தேடும் வகையில் இந்த பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

0 Responses to 4 நிமிடத்தில் முடிந்த முதல்வரின் உடல்நிலை குறித்த வழக்கு விசாரணை!

Post a Comment

Followers