Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சனிக்கிழமை பகல் 1.45 மணியளவில் பாகிஸ்தானின் சில பகுதிகளில் 5.5 ரிக்டர் அளவுடைய மிதமான நிலநடுக்கம் தாக்கியுள்ளதுடன் இது காஷ்மீரிலும் உணரப்பட்டுள்ளது.

முக்கியமாக இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் வடமேற்கே கைபர் பக்துங்வா மாகாணம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் வடக்குப் பகுதி என்பவற்றில் தாக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பாரிய உயிரிழப்புக்களோ அல்லது பலத்த  சேதமோ ஏற்பட்டதாக உடனடித் தகவல் எதுவும்  இன்னமும் வெளியாகவில்லை. PDMA எனப்படும் பாகிஸ்தானின் மாகாண அனர்த்த முகாமை அமைப்பு வெளியிட்ட தகவலில் ஹிந்து குஷ் மலைப் பகுதிகளில் குறித்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகத் தெரிய வருகின்றது. 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானைத் தாக்கிய பாரிய நிலநடுக்கம் ஒன்றினால் சுமார் 80 000  இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும்  கடந்த வருடம் ஆக்டோபர் 26 ஆம் திகதி 7.5  ரிக்டரில் தாக்கிய நிலநடுக்கத்தினால் பாகிஸ்தானில் 280 பேர் பலியாகியும் இருந்தனர்.

இதேவேளை சீனாவைத் தாக்கி வரும் மேகி புயல் காரணமாக ஏற்பட்ட கடும் மழை மற்றும் நிலச்சரிவுகளால் ஜீஜியாங் மாகாணத்தில் 33 பேர் காணாமற் போயிருப்பதாகவும் பெரும்பாலும் இவர்கள் இறந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to பாகிஸ்தான் காஷ்மீர் பகுதிகளில் 5.5 ரிக்டர் நில நடுக்கம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.