Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புள்ளதாக 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் நளினியை விடுதலை செய்வதுக் குறித்து தேசிய மகளிர் ஆணையம் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார் நளினி. இவரது கணவர் முருகன் உள்ளிட்ட 7 பேர் இதே வழக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.இந்நிலையில், தமது மகளுக்கு திருமணம் செய்துவைத்து, தாம் இயல்பான ஒரு வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், எனவே தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்றும்  தேசிய மகளிர் ஆணையத்துக்கு மனு ஒன்றை அனுப்பி இருந்தார் நளினி.

எனவே, நளினியை விடுதலை செய்வதுக் குறித்து சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளது மகளிர் ஆணையம்.

0 Responses to நளினியின் விடுதலைக் குறித்து சட்ட வல்லுனர்களிடம் மகளிர் ஆணையம் ஆலோசனை

Post a Comment

Followers