Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தொலைபேசி ஒட்டுக்கேட்டல் தொடர்பில் சில தரப்புக்களினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தால் சுயாதீனமான பொலிஸ் விசாரணையொன்றை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்ணாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கை பொலிஸ் அல்லது அதனோடு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் நீதிபதிகளது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பதாகவும், ஈமெயில் கணக்குகளுக்குள் அனுமதியின்றி பிரவேசித்து வருவதாகவும் குற்றச்சாட்டு சுமத்தும் விதத்தில் பல ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

இக்குற்றச்சாட்டு சுமத்தும் தரப்பினர் இது தொடர்பில் ஒழுங்கான முறைப்பாட்டை செய்வார்களானால் அது தொடர்பில் ஒழுங்கான, சுயாதீனமான விசாரணையை பொலிஸாரால் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கின்றேன். அதேபோன்று இந்த நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும். எந்தவொரு வகையிலும் நீதித் துறையின் சுயாதீனத்துக்கோ, நம்பகத்தன்மைக்கோ அபகீர்த்தி ஏற்படுத்துவதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to தொலைபேசி ஒட்டுக்கேட்டல் குற்றச்சாட்டுக்கள்; முறைப்பாடுகள் கிடைத்தால் சுயாதீன விசாரணை: சாகல ரட்ணாயக்க

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.