Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரியாவின் அலெப்போ பகுதியில் கிளர்ச்சிப் படையினருக்கு எதிராகப் போராட மேலதிக  ஜெட் யுத்த விமானங்களை அனுப்பி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், சிரியாவில் இராஜதந்திர முறையில் அரசியல் தீர்வைக் காணும் திட்டத்தை இன்னமும் கைவிடவில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.

சனிக்கிழமை அலெப்போவில் கிளர்ச்சிப் படை வசமுள்ள பகுதிகளில் ரஷ்ய யுத்த விமானங்கள் குண்டு வீசியுள்ளன. அதே நேரம் சிரிய இராணுவமும் ஷெல் வீசித் தாக்கியதுடன் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கிளர்ச்சியாளர்களும் கண்காணிப்புக் குழுவும் தெரிவித்துள்ளன. முக்கியமாக 10 நாட்களாகத் தொடரும் இத்தாக்குதலில் கிழக்கு அலெப்போவில் கிளர்ச்சியாளர்களின் பிடியிலுள்ள கடைசிப் பகுதியைக் கைப்பற்றுவது என்பது முக்கிய இலக்காக அமைந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க மாநிலச் செயலாளர் ஜோன் கெர்ரியுடன் தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் அலெப்போ பகுதியில் சூழ்நிலையை வழமைக்கு திரும்புவது குறித்து மாஸ்கோ கூடிய கவனம் செலுத்தும் என்று தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆயினும் செப்டம்பர் 9 ஆம் திகதி இணக்கப்பாட்டை எட்டியிருந்த ரஷ்யாவின் அமைதி ஒப்பந்தத்தை மீறிய நுஸ்ரா ஃப்ராண்ட் என்ற குழுவை அமெரிக்கா தீவிரவாத குழுவாக இனங்காணத் தவறியது முக்கியமான தவறு எனவும் லவ்ரோவ் அமெரிக்க அரசை சாடியிருந்தார்.

இன்றைய உலகில் மிக மோசமான உள்நாட்டுப் போராக தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக நீடிக்கும் சிரிய உள்நாட்டுப் போரில் வன்முறையைத் தடுக்க ரஷ்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்கா விட்டால் இராஜந்தந்திர பேச்சுவார்த்தைகளை நிறுத்தப் போவதாகவும் அமெரிக்கா பதிலுக்குத் தெரிவித்துள்ளது.

0 Responses to அலெப்போவை நோக்கி மேலதிக ரஷ்ய ஜெட் விமானங்கள்: அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா உறுதி!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.