Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று தஞ்சை உள்ளிட்ட 3 தொகுதிகளின் இடைத் தேர்தல் போட்டியாளர்களை திமுக அறிவித்துள்ளது. பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவி ஏற்பதற்கு முன்னதாக உயிரிழந்த திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைப்பெற உள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக இரண்டு தினங்களுக்கு முன்னதாக அறிவித்தது. இந்நிலையில், இன்று திமுக  வேட்பாளர்களாக அரவக்குறிச்சி  கே.சி.பழனிச்சாமி, தஞ்சை டாக்டர் அஞ்சுகம், திருப்பரங்குன்றம் டாக்டர் சரவணன் போட்டியிடுவார்கள்  என்று அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இடைத் தேர்தல் நடைப்பெறும் 3 தொகுதிகளிலும், செயல்படாத அதிமுக அரசின் நிலையை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்போம் என்று திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தலைவர் கருணாநிதி மற்றும் கழகத்தின் பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டவர்கள் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வார்களா என்பது இப்போது உறுதி செய்யப்படவிலை என்றும் ஸ்டாலின் கூறினார்.

0 Responses to தஞ்சை உள்ளிட்ட தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்தது!

Post a Comment

Followers