Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தஹாம் சிறிசேனவின் பாதுகாப்பு நீக்கம்!

பதிந்தவர்: தம்பியன் 12 October 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவுக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினால் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. 

கொழும்பில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற மோதல் சம்பமொன்றோடு ஜனாதிபதியின் மகன் தொடர்புபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, அவருக்கான பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரிலேயே தஹாம் சிறிசேனவுக்கு வழங்கப்பட்டு வந்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

0 Responses to தஹாம் சிறிசேனவின் பாதுகாப்பு நீக்கம்!

Post a Comment

Followers