Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது நாட்டில் நடைபெற்ற பல வருட கால தவறான அர்த்தப்படுத்தலால் படிந்து கிடக்கும் சந்தேகங்கள், வெறுப்புக்கள், புரியாமைகள் அகற்றப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் சிகிச்சைக்காக நிதி சேகரிக்கும் பொருட்டு ‘பாதை 2016’  என்கிற நடை பயணம், வடமுனை பருத்தித்துறையிலிருந்து தெற்கு தேவேந்திரமுனை வரையில் இடம்பெறுகின்றது. இதன் ஆரம்ப வைபவம் நேற்று வியாழக்கிழமை காலை பருத்தித்துறையில் இடம்பெற்றது. இந்நிகழ்கில் கலந்து கொண்டு பேசும் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “பாதை நிறுவன ஒழுங்கமைப்பாளர்களே, பெருமதிப்புக்குரிய பங்குபற்றாளர்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே, எனதருமை சகோதர சகோதரிகளே,

இன்று இங்கு தொடங்கும் நடை பவனி தெற்கில் புற்று நோயைப் போக்க எடுக்கப்படும் ஒரு நடவடிக்கை மட்டுமல்ல. எமது நாட்டில் நடைபெற்ற பல வருட கால தவறான அர்த்தப்படுத்தலால் படிந்து கிடக்கும் சந்தேகங்கள், வெறுப்புக்கள், புரியாமைகள் போன்றவற்றை அகற்றவும் இந்த நடைபவனி உதவி புரியப் போகின்றது.

ஒழுங்கமைப்பாளர்களுக்கு எங்கள் நன்றி. இந் நடை பவனியில் பங்குபற்ற வந்திருக்கும் எமது மதிப்பிற்குரிய அதிதிகளுக்கு எமது நன்றி. நன்றே நடக்க என் வாழ்த்துக்கள்.” என்றுள்ளார்.

0 Responses to தவறான அர்த்தப்படுத்தலால் படிந்து கிடக்கும் சந்தேகங்கள் நீக்கப்பட வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...