Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட 4 பேரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று பிற்பகல் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது திருமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள முன்னாள் மேயரின் வீட்டின் ஒரு பகுதியில் இருந்து இரு பெண்கள் உட்பட 7 பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.

மேலும் அதனை நடாத்திவந்ததாக சந்தேகத்தின் பேரில் சிவகீதா மற்றும் அவரது கணவரும் கைதாகினர்.

இந்தநிலையில் நடைபெற்று வந்த விசாரணையின் அடிப்படையில் முன்னாள் முதல்வரின் கணவர் உட்பட 5 பேர் நேற்று பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை, இன்று காலை முன்னாள் முதல்வர் சிவகீதா உட்பட 3 பெண்களும் ஒரு ஆணும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  இவர்கள் நால்வரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் எம்.கணேசராசா உத்தரவு  பிறப்பித்துள்ளார்.

0 Responses to விபசார விடுதி விவகாரம்: மட்டு முன்னாள் மேயர் சிவகீதா விளக்கமறியலில்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...