Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு இலங்கைக்கு தொடர் அழுத்தங்களை நியூஸிலாந்து வழங்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையின் நியூஸிலாந்து பிராந்தியப் பணிப்பாளர் கிராண்ட் பேல்டன் வலியுறுத்தியுள்ளார்.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், இலங்கையின் மனித உரிமை செயற்பாடுகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை நாம் வரவேற்கிறோம். ஆனால், இலங்கையில் இன்னும் பல சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. அவை தொடர்பில் நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அவற்றில் பயங்கரவாதத் தடைசட்டத்தை நீக்குவது தொடர்பில் அழுத்தம் கொடுக்க வேண்டியது பிரதானமானதாகும். பயங்கரவாதத் தடை சட்டமானது, அப்பாவி மக்களை கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்துவதற்காக வழங்கப்படும் அனுமதிப் பத்திரமாகும்.” என்றும்  சர்வதேச மன்னிப்பு சபையின் நியூஸிலாந்து பிராந்தியப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்துக்கான உத்தியோகபூர்வ பயணத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ள நிலையிலேயே, சர்வதேச மன்னிப்பு சபையின் நியூஸிலாந்து பிராந்தியப் பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு இலங்கைக்கு நியூஸிலாந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை

Post a Comment

Followers