Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகிலேயே திறந்தவெளி பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறி உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

அந்த உரையில், உலகிலேயே திறந்தவெளி பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்தியாவில் எளிதாக தொழில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான பலன்கள் தெளிவாக தெரிய வருகிறது. கடந்த 2 வருடங்களில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

மேலும், வர்த்தகத்தை பலப்படுத்துவது, முதலீடு தொடர்பான இலக்குகளை இடைய பிரிக்ஸ் கூட்டமைப்பு பயன்படுத்தப்பட வேண்டும். வர்த்தகத்தை ஊக்குவிப்பதும், பொருளாதார ஒத்துழைப்புமே பிரிக்ஸ் நாடுகளின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.பிரிக்ஸ் குழு பன்முகத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. பயங்கரவாதத்திற்கு ஆதரவாக அரசியல் ரீதியாக ஆதரவு தருவது நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை குறிப்பிட்டு இருக்கக்கூடாது. பயங்கரவாதத்திற்கு எதிரான பாரபட்ச நடவடிக்கை பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

0 Responses to உலகிலேயே திறந்தவெளி பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா: மோடி

Post a Comment

Followers