Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணை மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருகனும், பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட ஏனைய பணிப்பாளர்களைக் கைது செய்யுமாறு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பரிந்துரை செய்துள்ளது.  

இந்த நிறுவனம், முறைகேடான முறையில் இலாபமீட்டியுள்ளதாகவும், அதன் மூலமாக நிறுவனத்தில் பணிப்பாளர்கள் குற்றமிழைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அந்நிறுவனத்தின் பணிப்பாளர்களைக் கைது செய்து, குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், கோப் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவின் தலைவரும், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில், பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை கூடிய போதே, இவ்வாறான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

அதேபோல், இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த பிணை மோசடி ஊடாக, இலாபத்தைப் பெற்றுக்கொண்ட இன்னும் பல நிறுவனங்கள் தொடர்பிலும் தகவல்கள் வெளியானதுடன், அந்த நிறுவனங்கள் தொடர்பிலும், உடனடியாக குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், கோப் குழு பரிந்துரைத்துள்ளது. 

மேற்குறிப்பிட்ட இந்த பரிந்துரைகள் தொடர்பில் இறுதியான தீர்மானமொன்றை எடுப்பதற்கு அக்குழு, எதிர்வரும் 27ஆம் திகதி, மீண்டும் கூடவிருக்கிறது. 26 பேரடங்கிய கோப் குழுவின் நேற்றைய கூட்டத்தின் போது, 11 பேர் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர்.

0 Responses to மத்திய வங்கி பிணை மோசடி; அர்ஜூன மகேந்திரனின் மருமகனை கைது செய்ய கோப் குழு பரிந்துரை!

Post a Comment

Followers