Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 2016 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் முதல் 400 செல்வந்தர்கள் பட்டியலில் மைக்ரோசாஃட் ஸ்தாபகரும் இயக்குனருமான பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றார்.

இவரது சொத்து மதிப்பு $81 பில்லியன் டாலர்களாகும். அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 35 இடங்கள் பின்னுக்குத் தள்ளப் பட்டு 156 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முக்கிய காரணமாக கடந்த வருடம் இவர் $800 மில்லியன் டாலர்கள் நட்டமடைந்தது கூறப்படுகின்றது. டிரம்பின் சொத்து மதிப்பு $3.7 பில்லியன் டாலர்களாகும். ஃபோர்ப்ஸின் இந்த கருத்துக் கணிப்பில் 10% வீத செல்வந்தர்கள் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களில் முதலிடத்தில் $37.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ரஷ்யாவில் பிறந்த செகெய் பிரின் என்பவர் உள்ளார். ஃபேஸ்புக் ஸ்தாபகர் மற்றும் இயக்குனரான மார்க் சூக்கர்பேர்க் $55.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 4ஆம் இடத்தில் உள்ளார். மிக இளவயது செல்வந்தராக 26 வயதுடைய எவான் ஸ்பியேஜெல் $2.2 பில்லியன் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார். பில்கேட்ஸ் தொடர்ந்து 23 வருடங்களாக ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் செல்வந்தர்கள் பட்டியலில் இடம் பிடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இம்முறை 40 வயதுக்கு கீழே உள்ள 14 பேர் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அமேசன் நிறுவனத்தின் ஜெஃப் பெஸொஸ் 2 ஆம் இடத்திலும் வாரன் பஃபெட் 3 ஆம் இடத்திலும் உள்ளனர்.

0 Responses to ஃபோர்ப்ஸ் இன் செல்வந்தர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம்

Post a Comment

Followers