Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிப்பதனாலேயே பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேசினார்.

அதன்பின்னர், இந்திய ஊடகவியலாளர் மத்தியில் ரணில் விக்ரமசிங்க பேசினார். அதன்போதே, இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிடுதல் தொடர்பில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பேச்சுவார்த்தை மூலமே மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். எல்லை தாண்டுவதால் இரு தரப்பிலும் விரும்பத்தகாத பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மீனவர்கள் எல்லை தாண்டுவதால் அவர்களை கைது செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நவம்பரில் நடக்கும். இலங்கை இந்திய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையை ஒருங்கிணைப்பார்கள்.

ஆப்கான், பங்களாதேஷ் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. ஒத்துழைப்பு இல்லையென்றால் எதிர்காலத்தில் சார்க் இருப்பது சந்தேகம். எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து சார்க் ஆலோசனை நடத்த வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்தது போராடுவது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்.

இந்தியா- இலங்கை உறவு வலுவாக உள்ளது. பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறோம்.இலங்கை உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா தொடர்ந்து உதவி செய்கிறது. சீனாவுடனான இலங்கை உளவு பொருளாதார ரீதியிலானது. இராணுவ ரீதியிலானது அல்ல.

வடக்கு மாகாணத்தில் மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் தமிழர்களுக்கு உரிய நிலங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட பள்ளி, மருத்துவமனைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.” என்றுள்ளார்.

0 Responses to இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதாலேயே பிரச்சினைகள் ஏற்படுகின்றன: ரணில்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.