Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு தன்மேல் இரகசிய காதல் இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கேவலம் அங்கஜன், விஜயகலா மற்றும் டக்ளஸ் பெற்றது வாக்குகள் எனின் ஏன் அதைப்பற்றிக் கதைக்கின்றீர்கள் என சுமந்திரனிடம் கஜேந்திரகுமார் மீண்டும் கேள்வி எழுப்பினார்.

இரகசிய காதல் போன்று செல்லும் இடமெல்லாம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பற்றியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பற்றியும் கதைக்கின்றார்கள்.

இரகசிய காதலை வெளியில் காட்டிக்கொள்ள முடியாது. ஏனெனில் இரகசிய காதல் பிடிபட்டு விடும். ஏம்மைப்பற்றி தினமும் திட்டிக்கொண்டிருந்தால் அது பாவம்.

தற்போது சுமந்திரனின் நிலமைகள் இறுகிக்கொண்டு வருகின்றது. சொன்ன பொய்கள் எல்லாவற்றினையும் திசை திருப்புவதற்காக இவ்வாறு சுமந்திரன் கூறுகின்றார் போலிருக்கின்றது.

தமிழ் மக்கள் சுமந்திரனின் கருத்துக்களைக் கேட்டு செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைந்து கொண்டு வருகின்றன. அதனை நினைத்து அவர் பதற்றமடைகின்றார்.

அரசியல் அமைப்புப் பற்றி கதைக்க முற்படும் போதெல்லாம் அரசியல் அமைப்புப் பற்றி தமக்கு மட்டும் தான் தெரியுமென சுமந்திரன் அனைத்து இடங்களிலும் தெரிவிக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தனுக்குக் கூட தெரியுமென அவர் சொல்வதில்லை. எல்லாமே தான் என்ற வாறு கதைத்துக்கொண்டு திரிகின்றார்.

இனப்பிரச்சினை குறித்து ஒரு திட்டத்தினை வகுக்க முடியாது. தமிழ் மக்களின் முக்கியத்துவம் விளங்காது. தொடர்ந்தும் இவ்வாறான பொய்களைக் கூறிக்கொண்டிருந்தால் தனது அரசியலுக்கு ஆபத்து வந்து விடுமென பயப்படுகின்றார் போலிருக்கின்றது. என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to சுமந்திரனுக்கு என்மேல் இரகசிய காதல்: போட்டுடைத்த கஜேந்திரகுமார்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.