Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தன்னையும், தன்னுடைய நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் நோக்கில் புலனாய்வுப் பிரிவினர் தன்னை தொடர்ந்தும் பின் தொடர்வதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

தனது நடமாட்டத்தை கண்காணிப்பதற்கான நியாயமான காரணங்கள் எதனையும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், தான் எந்தவொரு வகையிலும் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னைப் பின்தொடர்வதனைக் காட்டிலும் வேறு முக்கியமான பணிகள் புலனாய்வுப் பிரிவினருக்கு உண்டு என்பதே முக்கியமான விடயம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய நடமாட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து மறைப்பதற்கு எதுவுமில்லை. தேவை ஏற்பட்டால் தானே அது பற்றி விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கின்றேன் என்றும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

0 Responses to புலனாய்வுப் பிரிவினர் என்னைப் பின் தொடர்கின்றனர்; கோத்தபாய குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...