Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் கப்பல் மூழ்கி இரண்டு ஆண்டுகளாகிவிட்டது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மூழ்கிய கப்பலில் பயணம் செய்ய நினைப்பவர்களும் கடலில் மூழ்க வேண்டிய நிலை ஏற்படும். மஹிந்த ராஜபக்ஷவின் பின்னால் சென்று கொண்டிருப்பவர்கள் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். கட்சியே இல்லாதவர்கள் ஆட்சியை அமைக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரி- ரணில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேவையுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, துமிந்த திசாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் கப்பல் மூழ்கி இரண்டு ஆண்டுகளாகிவிட்டது: துமிந்த திசாநாயக்க

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.