Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணு பிரியா கடந்த வருடம், நீண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த தற்கொலையில், மர்மங்கள் உள்ளன என்று இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று, விஷ்ணு பிரியாவின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.சென்னை உயர் நீதிமன்றம் விஷ்ணுபிரியாவின் பெற்றோருக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்தது.

விஷ்ணு பிரியாவின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.வழக்கில் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் விஷ்ணுபிரியாவின் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

0 Responses to டி.எஸ்.பி விஷ்ணு பிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post a Comment

Followers