Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எல்லையில் ஊடுருவ தீவிரவாதிகள் தயார் நிலையில் உள்ளதாலும், பாகிஸ்தான் படைகளும் தொடர்ச்சியாக அத்துமீறுவதாலும் அங்கு பதற்றம்அதிகரித்துள்ளது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ 100 தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாதிகள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதை வெளிப்படையாக மறுத்தாலும், பதிலுக்கு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயாராகி வருகிறது. குறிப்பாக தீவிரவாதிகளை ஊடுருவ செய்து இந்தியாவின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்காக எல்லைக் கட்டுப்பாட்டு ஒட்டிய பகுதியில் 100 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, ஆர்எஸ்புரா உள்ளிட்ட இந்திய எல்லை ஒட்டிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. 

குர்தாஸ்பூர், பூஞ்ச் மற்றும் அக்னூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஞாயிற்று கிழமையன்று பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டது. இதனைத்  தொடர்ந்து நேற்றிரவு மீண்டும் நவ்ஷிரா என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. இந்நிலையில் எல்லையோர அக்னூர் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பாதுகாப்பு முகாமில் தங்கி சமைத்து உண்டு வருகின்றனர்.

0 Responses to எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் தீவிரவாதிகள்: அச்சத்தில் மக்கள் முகாம்களில் தஞ்சம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.