Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

துணை முதல்வரையோ இடைக்கால முதல்வரையோ நியமிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வரின் உடல்நலன் குறித்து விசாரிக்க சென்ற வைகோ, பின்னர் ஆளுநரை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,முதல்வர் உடல்நலன் தேறிவருகிறார். ஆளுநரை  பழைய நெருங்கிய நன்பர் என்ற முறையில் சந்தித்தேன்.அரசியல் ரீதியாக பேசவில்லை.என்று கூறினார். 

முன்னதாக மருத்துவ மணியை விட்டு வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் நலமாக இருக்கிறார்கள். அவர்கள் பூரண நலம்பெறுவதற்கான மருத்துவ  சிகிச்சை நடைபெற்று வருகிறது என்று கூறினார். மேலும்,அதிமுக தொண்டர்களின் கவலைகள் விரைவில் நீங்கும். முழு உடல்நலத்துடன் இல்லத்திற்கு திரும்புவார். காவிரி பிரச்சனையை சட்டப்பூர்வமாக அணுகி, உச்சநீதிமன்றத்தில் நம் நியாகத்தை உணரவைத்து பாதுகாத்து கொடுத்தார். ,இந்த நிலையில் அவர் உடல்நலக் குறைவு அடைந்ததை அறிந்து கவலை அடைந்தேன். 

நான் மருத்துவர்களிடம் பேசினேன். குறிப்பாக ரிச்சர்ட் பேலை சந்தித்து பேசினேன். அவர் என்னிடம் விசிட்டிங் கார்டு கொடுத்தார். அவரிடம் சொன்னேன். நீங்கள் இரண்டு முறை இங்கு வந்தது எங்களை நெகிழச் செய்தது. உங்களைப் போன்ற உயர்ந்த மருத்துவர்களின் வைத்தியத்தால் அவர் நலமாக இருப்பதிலே நம்பிக்கையோடு இருக்கிறோம் என்று சொன்னேன். அவரும் நன்றி தெரிவித்தார். 

எனவே முதலமைச்சர் முழு உடல்நலம் பெற்று அவர்கள் இல்லம் திரும்ப வேண்டும் என்று நான் இயற்கை அன்னையினுடைய அருளை யாசிக்கிறேன். இவ்வாறு கூறினார்.   முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சையால் அவர் குணமடைந்து வருகிறார் :புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து  மருத்துவர்களிடம் புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேட்டறிந்தார். முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சையால் ஜெயலலிதா குணமடைந்து வருவதாகவும், பூரண நலமடைந்து ஜெயலலிதா விரைவில் பணிக்கு திரும்புவார்  என தெரிவித்தார்.  முதல்வரின் உடல் நிலை குறித்து அமைச்சர்கள் பன்னீர் செல்வம், விஜய பாஸ்கரிடம் கேட்டு அறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to துணை முதல்வரையோ இடைக்கால முதல்வரையோ நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை: வைகோ

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.