Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டிலுள்ள அனைத்து இனத்தவருக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதனையும், ஒவ்வொரு இனத்தின் இறைமையும் மதிக்கப்படுவதனையும் புதிய அரசியலமைப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 42வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றக்கிழமை நடைபெற்றது.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளதாவது, “நாடு சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் பெரும்பான்மை இன மக்கள் தான் சுதந்திரம் அடைந்தார்கள். ஏனைய சிறுபான்மை மக்கள் சுதந்திரமடையவில்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

அதற்கு காரணம் இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களால் சகல இனத்தை சார்ந்தவர்களால் வெவ்வேறு இனத்தை பிரதிநிதித்துவப்டுத்துகின்ற அரசியல் கட்சிகளால் ஒருமித்து இந்த நாட்டிற்கு ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்படவில்லை என்பதாகும்.

முதலாவது அரசியலமைப்பினை ஆங்கிலேயர்கள் நிறைவேற்றினார்கள். பின்னர் 72ஆம் ஆண்டும், 78ஆம் ஆண்டும் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கள் தனிப்பட்ட கட்சியினால் ஏனைய கட்சிகளின் ஆதரவை பெறாமல்  நிறைவேற்றப்பட்டன. அந்த காரணத்தினால் அந்த அரசியலமைப்புக்கள் இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களை ஒற்றுமைப்படுத்தவில்லை.

இந்த நிலையில் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். தற்போது நாட்டில் இரண்டு பிரதான கட்சிகளும் ஆட்சி புரிந்து வருகின்றன. எனவே புதிய அரசியலமைப்பினை உருவாக்கக் கூடிய வாய்ப்பு அவர்களுக்கு இருக்கின்றது.

இந்த அரசியலமைப்பு சமரசத்தின் அடிப்படையில் இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், இந்த நாட்டில் சுதந்திரமாக வாழக்கூடும் என்ற அடிப்படையில் வாழ உருத்துடையவர்கள் என்ற அடிப்படையில் அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, ஒவ்வொரு இனத்தின் இறைமையும் மதிக்கப்பட்டு அந்த இறைமையின் அடிப்படையில் இந்த அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என விரும்புகின்றோம்.  அவ்விதமான அரசியலமைப்பு உருவாவதற்கு எங்களால் இயன்ற அத்தனை ஒத்துழைப்புக்களை முயற்சிகளை நாம் வழங்கி வருகின்றோம்.

இந்த நாட்டில் வாழும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் நாடு பிரிக்கப்படாமல் நாட்டிற்கு குந்தகமும் ஏற்படாமல், நாடு பிளவுபடாமல் ஒரே நாட்டிற்குள் ஒருமித்து ஒற்றுமையாக சமத்துவமாக சமாதானமாக வாழக்ககூடிய ஒரு  அரசியலமைப்பு உருவாக்க வேண்டும். அதற்கு பெரும்பான்மை இனத்தை சார்ந்தவர்கள் மாத்திரமன்றி சிறுபான்மை இனத்தை சார்ந்தவர்களும் தங்களுடைய ஆதரவை வழங்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to ஒவ்வொரு இனத்தினதும் இறைமை மதிக்கப்படும் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்: சம்பந்தன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.