Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

'நரகத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் ரஷ்யாவிடம் இருந்தோ அல்லது சீனாவிடம் இருந்தோ ஆயுத உதவி பெற முடியும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வெளிப்படையாக கடுமையாக சாடியுள்ளார் பிலிப்பைன்ஸின் புதிய அதிபர் றொட்ரிகோ டுடெர்ட்டே.

அமெரிக்க இராணுவம் பிலிப்பைன்ஸில் இருந்த போது நடைபெற்ற மோசமான போதைப் பொருள் யுத்தத்தில் 3 மாதங்களுக்குள் 3400 பேர் வரை கொல்லப் பட்டதை  அடுத்து அமெரிக்கா மீதான தனது மரியாதை மறைந்து விட்டதாக டுடெர்ட்டே தெரிவித்துள்ளார்.

தலைநகர் மனிலாவில் முன்னதாக டுடெர்ட்டே நடத்திய உரையில், அமெரிக்கா தமக்கு ஏவுகணைகள் மற்றும் ஏனைய ஆயுதங்களைத் தர மறுத்து விட்டது. ஆனால் ரஷ்யாவும் சீனாவும் மிக இலகுவாக குறித்த ஆயுதங்களை பிலிப்பைன்ஸுக்கு வழங்கத் தயாராக இருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளன என்று தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் மற்றும்  அமெரிக்காவுக்கு இடையே கைச்சாத்தான ஒப்பந்தப் படி அமெரிக்கத் துருப்புக்கள் பிலிப்பைன்ஸின் கப்பற் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்ததுடன் கடற் பிராந்திய பாதுகாப்பு, மனிதாபிமான மற்றும் அனர்த்த கால சேவை செயற்திட்டங்களுக்கான ஏற்பாடுகளும் உருவாக்கப் பட்டிருந்தது.

எனினும் இவை அமெரிக்காவின் சொந்த நலங்களுக்காகப் பாவிக்கப் படவே என்றும் பிலிப்பைன்ஸின் உள்நாட்டில் நடைபெற்ற போதைப் பொருள் யுத்ததில் அமெரிக்காவோ, ஐரோப்பிய யூனியனோ தலையிடவில்லை என்றும் டுடெர்ட்டே சாடியுள்ளார். பிலிப்பைன்ஸ் அதிபர் டுடெர்ட்டே இன் எதிர்ப்பு நடவடிக்கை குறித்து கூடுதல் கவனம் செலுத்தப் பட்டு வருகின்றது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை முன்னால் யுத்த எதிரிகளாக விளங்கிய அமெரிக்காவும் வியட்நாமும் தமது இராணுவ உறவை சற்று பலப் படுத்தியுள்ளன. அதாவது 21 வருடங்கள் கழித்து முதன்முறையாக இரு அமெரிக்க யுத்த விமானங்கள் வியட்நாமின் கேந்திர முக்கியத்துவம் மிக்க கப்பற்படைத் தளமான காம் றான்ஹ் பே இனை அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ரஷ்யா மற்றும் சீனாவிடம் ஆயுத உதவி பெற முடியும்: ஒபாமாவுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் பதிலடி!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.