Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நியூஸிலாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந் நாட்டு பிரதமர் ஜோன் கீயுடனான சந்திப்பின் போதே மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மார்ச் மாதமளவில் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்று உலக பயங்கரவாத நடவடிக்கைகள் பல்வேறு புதிய நுட்பங்களை கையாண்டு பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.  ஆகவே, தற்கால பயங்காரவாத செயற்பாடுகளுக்கு முகங்கொடுக்கும் விதமான வகையில் புதிய சட்டம் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக இலங்கையின் ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் விஷேட துறைசார்ந்த நிபுணத்துவர்களின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டு, எதிர்வரும் 20, 30 வருடங்களுக்கு செல்லுபடியாகும் விதமான முறையில் இந்த புதிய சட்டம் உருவாக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.

0 Responses to பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: ரணில்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.