Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி கடிதம் எழுதியுள்ளார்.

சுப்ரமணிய சாமி எழுதியுள்ள கடிதத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தொடர்பு கொள்ள முடியாத நிலையில், மருத்துவமாண்பையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், ஓய்வுப் பெற்ற  தலைமைச் செயலாளர் தலைமையில் தற்போது அரசு இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தின் ராமநாத புரம்,, மதுரை, கோவை, திருநெல்வேலி  ஆகிய மாவட்டங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் அதிகரித்துள்ளனர் என்றும், இவர்களுக்கு ஆதரவாக இதுவரை அமைதியாக இருந்த எல்டிடிஇ-னர் செயல்படுவதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் கெட்டுப்போய் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

எனவே, மத்திய அரசு இந்திய அரசியலமைப்பின் 356 வது சட்டப்பிரிவை பயன்படுத்துவது அவசியம் என்றும், அவசியம் மட்டும் இல்லாமல் மத்திய அரசின் கடமை என்று மத்திய அரசு உடனடியாக செயல்பட வேண்டும் என்றும்  கோரிக்கை வைத்துள்ளார். அதாவது, தமிழகத்தில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும், அதுவரை சட்டப்பேரவையை 6 மாதங்களுக்கு முடக்கி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: சுப்ரமணிய சாமி கடிதம்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.