Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முதல்வர் ஜெயலலிதாவுக்கு பேசிவ் பிசியோதரப்பி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை ஏற்கனவே அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் உடல் நிலை கருதி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தால் இந்த பயிற்சிகள் முழுமையாக அளிக்க முடியவில்லை. டாக்டர்கள் அடிக்கடி சென்று பயிற்சிகள் அளிக்கும் போது, நோய் தொற்று அதிகரிக்கக் கூடிய சூழலும் உருவாகும். எனவேஜெயலலிதாவுக்கு சிறந்த முறையில் பயிற்சிகள் அளிப்பதற்காக நிர்வாகம் ஒரு புதிய எந்திரத்தை வாங்கியுள்ளது.

அதன் மூலம் மனிதர்கள் உதவி இல்லாமல் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இந்த எந்திரத்தை இயக்குவதற்கு ஒரே ஒரு டாக்டர் மட்டும் போதும். அந்த எந்திரத்தை எப்படி இயக்குவது என சொல்லிக்கொடுப்பதற்கு சிங்கப்பூரில் இருந்து எந்திரத்தை தயாரித்த கம்பெனி, டாக்டர்களையும் அனுப்பி வைத்திருக்கிறது. இது தான் சிங்கப்பூர் டாக்டர்கள் சென்னைக்கு வந்த ரகசியம்.

0 Responses to முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க புதிய எந்திரம்: சிங்கப்பூர் டாக்டர்கள் விசிட் ரகசியம்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...