Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாவீரர் நாள் டென்மார்க் அறிவித்தல்..

பதிந்தவர்: தம்பியன் 25 October 2016

டென்மார்க் மாவீரர் நாள் தொடர்பான அறிக்கை. ‘மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கிறது .

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்

எமது உயிரிலும் மேலான தமிழீழ மண்ணை மீட்பதற்காகவும் ஈழத் தமிழர்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காகவும் வீறு கொண்டெழுந்து போராடி மண்ணில் விதைகளாக வீழ்ந்த எமது மாவீரர்கள் ஆயிரம் ஆயிரமாய் எமது உள்ளக் கமலங்களில் உன்னதமான இடத்தில் வீற்றிருக்கிறார்கள். அவர்கள் எங்கள் தேசம் காக்க எழுந்த வீரர்கள் சாவின் பின்னும் வாழ்கின்றனர் . மகத்தான சாதனை படைத்த மாவீரர்களாகத் துயில்கின்றனர் .

தமிழீழ தேசமெங்கும் பரந்து மண்ணிலும், விண்ணிலும், கடலிலும் வீரமாய் விளையாடி, பகை வீழ்த்தி விதையானவர்களை நினைந்து சுடரேற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளே ‘கார்த்திகை 27′ எனும் புனித நாளாகும் .

1982 ஆம் ஆண்டு கார்த்திகை 27 ஆம் நாளன்று, தேசியத்தலைவர் அவர்களின் இலட்சியத்தின் மீது அசையாத நம்பிக்கை கொண்ட சங்கர் என்ற சத்தியநாதன் தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் முதல் விதையானான். சங்கரை தொடர்ந்து, ஆயிரமாயிரம் மாவீரர்கள் தமது விலைமதிக்க முடியாத இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கின்றனர். தமிழீழப் போராட்டத்தில் முதல் வித்தான சங்கர் மாவீரனான கார்த்திகை 27ஆம் நாள் மாவீரர்நாளாக 1989ஆம் ஆண்டு தேசியத் தலைவர் அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நாள் உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர் அனைவராலும் உணர்வுபூர்வமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கார்த்திகை 27 இல் மலர்தூவி, சுடரேற்றி மாவீரர்களை நினைவுகூருதல் தமிழனாய் பிறந்த ஒவ்வொருவருடைய கடமையாகும் .
எங்கள் எல்லோருடைய வாழ்க்கைக்கும் ஒளிகொடுப்பதற்காய் தம்முயிரைக் கொடுத்த மாவீரரை நினைந்து ஈகச்சுடர் ஏற்றுவோம். அவர்களின் பாதையை தொடர்ந்து நாமும் உறுதியுடன் தடம் பதிப்போம். அவர்கள் இலட்சியத்தை ஈடேற்றுவதே எமது பணியாகும் .

டென்மார்க் வாழ் அனைத்து தமிழீழ மக்களையும் மண்ணுக்காய் வீர காவியமான மாவீரர்களை நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்த வருமாறு அழைக்கிறார்கள் .

டென்மார்க் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.


0 Responses to மாவீரர் நாள் டென்மார்க் அறிவித்தல்..

Post a Comment

Followers