Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராணுவ வீரர்கள்தான் உண்மையான ஹீரோக்கள், நடிகர்கள் சாதாரண மனிதர்கள்தான் என்று பாலிவுட் நடிகர் நாணா படேகர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று, மஹாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே கூறியிருந்தார். இதுக் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள நாணா படேகர், நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம் என்று கூறியுள்ளார். 

பாகிஸ்தான் நடிகர் நடிகைகளை வெளியேற்றுவதை விட, நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், அதை நோக்கித்தான் நாம் செயல்பட வேண்டும். உண்மையான ஹீரோக்கள் என்பவர்கள் இந்தியாவின் ராணுவ வீரர்கள்தான் என்றும், நடிகர்கள் சாதாரண மனிதர்கள்தான் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to இராணுவ வீரர்கள்தான் உண்மையான ஹீரோக்கள்; நடிகர்கள் சாதாக்கள்: நாணா படேகர்

Post a Comment

Followers