Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ‘எழுக தமிழ்’ பேரணியில் ஆற்றிய உரையை தென்னிலங்கை மனித உரிமைகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் தீவிரவாத கருத்துக்களாக காட்ட முயற்சித்து வருவதாக தமிழ் சிவில் சமூக அமையம் குற்றஞ்சாட்டியுள்ளது. 

யாழ். ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே தமிழ் சிவில் சமூக அமையத்தின் பேச்சாளர்களில் ஒருவரான கு.குருபரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நிமல்கா பெர்னாண்டோ உள்ளிட்ட தெற்கிலுள்ள சிவில் செயற்பாட்டாளர்களும் எழுக தமிழ் பேரணியையும், அங்கு ஆற்றப்பட்ட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரையினையும்  தீவிரவாத போக்கு  உடையாதாக சித்தரிக்க விரும்புகிறார்கள்.

எழுக தமிழ் இதுவரை முன்னெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த தமிழ் மக்களது வெவ்வேறான போராட்டங்களின் கூட்டிணைவே ஆகும். எழுக தமிழில் முதலமைச்சரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் முதலில் தென்னிலங்கை மனித உரிமைகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும்.

நிமல்காவின் கருத்து அவரது தராதரத்திற்கு குறைவானது. எழுக தமிழ் தொடர்பில் சிங்கள இனவாத அமைப்பான பொதுபலசேனாவும் கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது, நிமல்காவும் வெளியிட்டுள்ளார். அவ்வாறாயின் இரு தரப்பினதும் சிந்தனைகளும் ஒன்றா என்கிற கேள்வி எழுகின்றது.” என்றுள்ளார்.

0 Responses to சி.வி.விக்னேஸ்வரனின் உரையை தென்னிலங்கை செயற்பாட்டாளர்கள் தீவிரவாத போக்காக காட்ட முயற்சி: தமிழ் சிவில் சமூக அமையம்

Post a Comment

Followers