Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கான முன்னாள் ரஷ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இன்டர்போலூடாக (சர்வதேச பொலிஸ்) கைது செய்ய, கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, இன்டர்போல் பொலிஸாருக்கு இது தொடர்பான சிவப்பு அறிக்கை (ரெட் நோட்டீஸ்) அனுப்பி உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரின் ஊடாக உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் கோரியிருந்த நிலையிலேயே, இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இலங்கை விமானப் படையினருக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் பாரிய நிதி மோசடி நடந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to உதயங்க வீரதுங்கவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Post a Comment

Followers