Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திமுக நாளை கூட்ட உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்காது என்று, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவதுத் தொடர்பாக திமுக நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட, அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட திமுகவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கலந்துக்கொள்ள உள்ளன.

மதிமுக கலந்துக்கொள்ளாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கலந்துக்கொள்ளாது என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.மக்கள் நல கூட்டணி, குடியரசு தலைவரை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துத் தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்த கோரிக்கை வைத்துள்ளது என்பதால், இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், இடைத் தேர்தல் நடைப்பெறும் இந்த நேரத்தில் திமுக கூட்டும் இந்த அனைத்துக் கட்சிக்கு கூட்டத்தில் கலந்துகொள்வது முறையாக இருக்காது என்றும் அவர் அறிவித்துள்ளார்.ஆனால், நடக்க இருக்கும் இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு இல்லை என்று தெரிவித்துவிட்டு, திருமாவளவன், திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளலாம் என்று திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

0 Responses to திமுக நாளை கூட்ட உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்காது:திருமாவளவன்

Post a Comment

Followers