Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் காணொளி பிரதமர் நரேந்திர மோடியிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

கடந்த வாரம் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நுழைந்து, அங்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் முகாம்களை அதிரடியாக அழித்தனர்.ஆனால், இது உண்மையில்லை என்று பாகிஸ்தான் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், தாக்குதல் காணொளியை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில், இந்த காணொளியை இன்று ராணுவ தரப்பு பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைத்துள்ளது.இனி, வெளியிடுவதும், வெளியிடாமல் இருப்பதும் மோடியின் கையில்தான் உள்ளது. இதற்கிடையில் தமது அமைச்சர்களுக்கு மோடி ஒரு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அந்த அறிவுறுத்தலின், யாரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் குறித்து பேசி தம்பட்டம் அடித்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.

0 Responses to பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் காணொளி ஒப்படைப்பு!

Post a Comment

Followers