Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராணுவ வீரருக்கு வழங்கிய ரூ.1 கோடி இழப்பீடுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர் ராம் கிஷன் தற்கொலை செய்தற்கு டெல்லி அரசு ரூ.1 கோடி இழப்பீடு அறிவித்தது. டெல்லி அரசு ரூ.1 கோடி இழப்பீடு அறிவித்ததற்கு எதிராக வழக்கறிஞர் கவுசிக் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில்,வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர். 

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்கிற திட்டத்தை மத்திய அரசு அமல் படுத்தத் தவறியதால், முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துக்கொண்டார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to ராணுவ வீரருக்கு வழங்கிய ரூ.1 கோடி இழப்பீடுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Post a Comment

Followers