Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் 2017ஆம் ஆண்டினை வறுமை ஒழிப்பு ஆண்டாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. 

அதற்கான ஆரம்ப அணுகுமுறை மற்றும் செயற்படுத்த வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்து குறித்த செயற்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட செயற்பாட்டுக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சரத் அமுனுகம அவர்களது தலைமையிலான அக்குழுவில், அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, கபீர் ஹசிம், சஜித் பிரேமதாச, தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வணக்கத்துக்குரிய அத்துரலியே ரதன தேரர், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் செயற்படுவார்கள்.

2017 ஆண்டை நாட்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் இலங்கையில் வறுமையை இல்லாதொழிக்கும் தந்திரோபாய அணுகுமுறை தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அலுவலர்கள் பங்குபற்றியிருந்தார்கள். அக் கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அவர்களால் இக்குழு நியமிக்கப்பட்டது.

அனைத்து துறைகளினதும் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்களைப் பெற்று அடிப்படைத் திட்டமொன்றைத் தயாரிப்பதே இக்கலந்துரையாடலின் குறிக்கோளாகும். பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அலுவலர்களும் விரிவாக கருத்துக்களை முன்வைத்தார்கள்.

அனைத்து விடயங்களையும் கவனத்திலெடுத்த ஜனாதிபதி, இச் செயற்திட்டம் அடிமட்டத்திலிருந்து செயற்பாட்டு ரீதியாக அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அனைத்து மாகாண சபைகள் மற்றும் நிரல் அமைச்சுக்களும் ஒன்றுகூடி கலந்துரையாடி சுருக்கமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கினார்.

எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் அனைத்து அமைச்சுக்களும் இச் செயற்திட்டத்துக்குரிய செயற்பாடுகளை அமுல்படுத்த வேண்டுமெனவும், நியமிக்கப்பட்ட விசேட செயற்பாட்டுக் குழு தொடர்ச்சியாக அவற்றை ஆராய்ந்து தேவையான ஒருங்கிணைப்பினை மேற்கொள்ள வேண்டுமெனறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

0 Responses to ‘வறுமை ஒழிப்பு ஆண்டாக 2017 பிரகடனம்’ மைத்திரி தலைமையிலான கூட்டத்தில் முடிவு!

Post a Comment

Followers