Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொலம்பியா விமான விபத்து - 75 பேர் பலி

பதிந்தவர்: தம்பியன் 30 November 2016

பொலிவியாவிலிருந்து  கொலம்பியா நோக்கியப் பயணித்த  பயணிகள் விமானம் ஒன்று திங்கட்கிழமை இரவு கொலம்பியாவின் மெடெலின் நகருக்குச் சமீபமாக விபத்துக்குள்ளாகியதில்  75 பேர் பலியாகியுள்ளார்கள்.

72 பயணிகள், 9 விமானப் பணியாளர்கள் என 81 பேருடன் பயணித்த இவ் விமானம், LAMIA நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானமாகும்.  கொலம்பியாவின் பொகோத்தா Cerro Gordo மலைப்பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய இவ் விமானத்தின் சிதைவுகளுக்குள்ளிருந்து,  6 பேரை உயிருடன் மீட்டெடுத்துள்ளனர் மீட்புப் படையினர்.  இவ்வாறு மீட்கப்பட்ட அறுவரில் ஒருவர் பின்னர் உயிரிழந்திருப்பதாக பிந்திய செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to கொலம்பியா விமான விபத்து - 75 பேர் பலி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.