Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய அரசியலமைப்பினை வரையும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்பு பேரவையின் கீழுள்ள உப குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதம் வரும் ஆண்டு ஜனவரி மாதம் 9, 10, 11ஆம் திகதிகளில் நடைபெறும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவையின் கீழுள்ள ஆறு உப குழுக்களினதும் அறிக்கைகள் நேற்று சனிக்கிழமை பிரதமரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதன்பின்னரே அவர் மேற்கண்ட அறிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் அடுத்த கூட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதியன்று, பாராளுமன்றத்தில்  நடைபெறும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

0 Responses to அரசியலமைப்பு பேரவை; உப குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதம் வரும் ஜனவரி 9, 10, 11ஆம் திகதிகளில்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.