Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் கடப்பாடு மற்றும் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்குமாறு கோரி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு கடிதம் எழுதுவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

“டொனால்ட் ட்ரம்ப் இலங்கையில் கோரிக்கைகளை ஏற்பார் என்று நம்புகிறேன். இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எமது படைவீரர்களை பாதுகாக்க முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு காலியில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to இலங்கையை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்குமாறு கோரி டொனால்ட் ட்ரம்புக்கு கடிதம் எழுதுவேன்: மைத்திரி

Post a Comment

Followers