Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து கையகப்படுத்தி வைத்துள்ள பொதுமக்களின் 600 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதனூடாக சர்வதேசக் கவனத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்கி காணிகளை மீளவும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும், முதலமைச்சரின் மேற்கண்ட கோரிக்கையை நிராகரித்த கேப்பாபுலவு மக்கள், “ஏற்கனவே காணியை விடுவிக்கக் கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் பயன்கள் ஏதும் கிடைக்கவில்லை. மாறாக, இராணுவத்தினர் வழக்கு தொடுத்தவர்களை அச்சுறுத்தி வருகின்றது.” என்று பதிலளித்துள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் நேற்று புதன்கிழமை மாலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேப்பாப்புலவுக்கு நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடிய போதே இந்த விடயம் பேசப்பட்டது.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட முதலமைச்சர், “கேப்பாபுலவு கிராமத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களிடம் தான் தெரியப்படுத்தியுள்ளேன். எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பிரச்சினையை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துவதற்காக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதே சிறந்தது.” என்றுள்ளார்.

0 Responses to முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக வழக்கு தொடர வேண்டும்: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.