Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கிளிநொச்சியைச் சேர்ந்த சிவகுமார் சிந்துஜன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பிரதஜா நிரோசன், புங்குடுதீவு ரஜீவன், லிந்துதாஸ் இனுவில், பாலசுதன் யாழ்ப்பானம், காண்டீபன் பருத்தித்துறை, சிவநேசன் பருத்தித்துறை போன்ற இடங்களைச் சேர்ந்தவர்கள்.

குறித்த 9 பேரும் சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ளவர்கள் எனவும் இவர்கள் அந்தநாட்டு சட்டதிட்டத்தை மீறி குடியேறிய நிலையில் இவர்கள் நாட்டை விட்டு திருப்பி நாடு கடத்தப்பட்டுள்ளனர்

இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்கள் நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 1.05 மணி விசேட விமான மூலம் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்களை விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர் கட்டநாயக்க பொலிசார் தெரிவித்தனர்

சுவிட்சர்லாந்தில் இருந்த 9 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்த ஒன்பது இலங்கையரை அந்த நாட்டு அரசு நாடுகடத்தியுள்ளது. நேற்றுப் புதன்கிழமை 1.5 என்ற விஷேட விமானம் மூலம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

ஒன்பது பேரும் வடக்கை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் 6 மாதங்கள் தொடக்கம் இரண்டு வருடங்கள் வரை சுவிட்சர்லாந்தில் வசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இலங்கையர்கள் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசு மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்தே இவர்கள் நாடுகடத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

0 Responses to சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள்..

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.