Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யுத்தத்தினால் சீரழிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக வரவு- செலவுத் திட்டத்தில் இம்முறை இரண்டு மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

யுத்தத்தினாலும், சிறந்த வாழ்வு தேடியும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றோர் மீண்டும் நாட்டுக்கு திரும்பி வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆட்கடத்தல் மற்றும் நாடு கடந்த குற்றம் தொடர்பில் ஆராயும் பாளி மாநாட்டின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொள்ளும் 11வது உயர்மட்ட மாநாடு நேற்று  புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெருவித்தபோதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை தரமுயர்த்துவதன் மூலம் அங்கிருந்து மேற்குலகு நோக்கிச் சென்றோரை மீண்டும் வரவழைக்க முடியும். யுத்தத்தினால் சீர்குலைக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் இம்முறை கடந்த வருடத்திலும் பார்க்க இரண்டு மடங்கு நிதி யாழ்ப்பாணத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இப்பணிக்கு வலுசேர்க்கும் வகையில் மேற்குலகில் வசிக்கும் தமிழ் டயஸ்போராக்கள் யாழ்ப்பாணத்துக்கு நிதியுதவி செய்ய வேண்டும்.

உள்நாட்டு யுத்தத்தை காரணமாக வைத்து தமிழர்களும் சிறந்த வாழ்க்கை முறையை எதிர்பார்த்து அனைத்து இனங்களைச் சேர்ந்தவர்களும் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தனர். நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்படுமாயின் இவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பி வருவதில் எவ்வித ஐயமும் இல்லை. யுத்தத்திற்கு அஞ்சி நாட்டை விட்டுச் சென்றவர்களை மீண்டும் அழைக்கும் அடிப்படையில் அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 2009ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் வெளிவிவகார அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அதேநேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.” என்றுள்ளார்.

0 Responses to யாழ். அபிவிருத்திக்கு இரு மடங்கு நிதி; புலம்பெயர்ந்தோர் திரும்பி வர வேண்டும்: ரணில்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.