Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2017ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் 2வது வரவு- செலவுத் திட்டம் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்பிக்கப்பட்டது. அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வரவு- செலவு திட்டத்தில் வருவாயை அதிகரிப்பதற்கான முயற்சிகள் தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. எனினும், மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய பல வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதேவேளை, வழமையான வரவு- செலவு  திட்டங்கள் போன்று இம்முறையும் வடக்கு- கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீள்ச்சி என்பவை தொடர்பில் சுட்டி க்காட்டப்பட்டதாக இல்லை. எனவே இவ் வரவு-செலவு திட்டம் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் வரவு - செலவுத் திட்டம்: சுமந்திரன்

Post a Comment

Followers